நான் இருக்கும் போதே இன்னொருத்தியுடன் கணவனுக்கு ஏற்பாடு..! 25 வயது இளம் மனைவி எடுத்த அதிர்ச்சியளிக்கும் முடிவு..!

தங்களுடைய மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலத்தின் மைசூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதர் என்ற 32 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பாரதி என்ற 25 வயது பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. ஸ்ரீதர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

சென்ற மாதம் 25-ஆம் தேதியன்று உடல் முழுவதிலும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். பாரதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பாரதியின் பெற்றோர் காவல்நிலையத்தில் வேறுவிதமாக புகாரளித்துள்ளனர். அதாவது "திருமணத்தின் போது கிட்டத்தட்ட 200 கிராம் தங்கம் மற்றும் இருசக்கர வாகனம் வரதட்சணையாக அளிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நிறைய வரதட்சனை வேண்டும் என்று பாரதியை ஸ்ரீதர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தனர். பாரதி மட்டுமின்றி எங்களையும் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டினர். 

வரதட்சனை கொடுக்கவில்லை என்றால் நிச்சயமாக 2-வது திருமணம் செய்து கொள்வதாகவும் பாரதியை அவர்கள் மிரட்டினர். ஆகையால் என்னுடைய மகளை நிச்சயமாக அவர்கள் தீவைத்து எரித்து கொன்றிருப்பர். தீ வைத்துக் கொன்றுவிட்டு தற்போது கற்பனை என்று நாடகம் ஆடுகின்றனர்" என்று புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.