17 வயதில் திருமணம்..! 2 குழந்தைகள்..! 23 வயதில் நடுத்தெரு..! கணவனால் முஸ்லீம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

கோழிக்கோடு: முத்தலாக் கொடுத்த கணவரின் வீட்டு முன்பு, மனைவி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.


கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் நாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சமீர். இவருக்கும், ஜூவைரியா என்ற பெண்ணிற்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், சமீர் திடீரென மூன்று முறை தலாக் கூறி ஜூவைரியாவை பிரிந்துவிட்டாராம்.  

இஸ்லாமிய வழக்கப்படி முத்தலாக் அங்கீகரிக்கப்பட்டாலும், இதனை தடுத்து, இந்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. எனவே, இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்கள் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்ய முடியாது. இந்நிலையில், சமீர் முத்தலாக் சொன்னதை கண்டித்து, அவரது மனைவி வீட்டின் முன்பாக, அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்பேரில் வலயம் போலீஸ் நிலையத்திலும் ஜூவைரியா புகார் செய்துள்ளார். சமீரை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.