பெண்ணின் தலைமுடியை கத்தரிகோலால் வெட்டி திருடிய நூதன திருடன்! ஷேர் ஆட்டோவில் விபரீதம்! அதிர்ச்சி காரணம்!

ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 23 வயது பெண்ணின் கூந்தலை சக பயணி ஒருவர் வெட்டியுள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் நெற்குன்றத்திற்கு அருகே ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது 35 வயது நிரம்பிய சக பயணி ஒருவர் இவருடைய கூந்தலை வெட்டியுள்ளார். அமிஞ்சிகரைக்கு சென்று தன்னுடைய தோழியை பார்த்து விட்டு வருவதற்காக பாதிக்கப்பட்ட பெண் ஷேர் ஆட்டோவில் சென்றிருந்தார்.

அப்போது அந்த அந்த பெண் தன் முடியை கோதியுள்ளார். அப்போது தன் தலையில் பாதி முடி இல்லாததை உணர்ந்த அந்த பெண் கூச்சலிட தொடங்கியுள்ளார். உடனடியாக ஷேர் ஆட்டோவில் இருந்து நடுத்தர வயது நபர் ஒருவர் இறங்கி குதித்து தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் அவரை அதே சாரணை சேர்ந்த பலர் தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்தனர்.

உடனடியாக அவர்கள் காவல்துறையினரை அழைத்து நிகழ்ந்தவற்றை கூறியுள்ளனர். காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது, அஞ்சனா அவர் தண்டையார்பேட்டை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் எதற்காக அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டினீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அத்துடன் அவரிடம் கத்திரிக்கோல் ஏன் எடுத்து வந்தீர்கள் என்று கேட்டபோது உபயோகப் படுத்துவதற்காக எடுத்து வந்தேன் என்று பதிலளித்துள்ளார். பெண் புகார் அளிக்கவில்லை என்பதால் அந்த நபரை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவமானது தண்டையார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.