22 வயது இளம்பெண், மரணமடைந்த விவகாரத்தில், அவரது காதலன் கைது செய்யப்பட்டார்.
திருமணத்திற்கு முன்பே காதலனுடன் படுக்கையை பகிர்ந்த காதலி! வாடகை வீட்டில் அரங்கேறிய பயங்கரம்!
அஞ்சனா வஷிஷ்டா என்ற அந்த பெண், கடந்த வெள்ளிக்கிழமை மங்களூருவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பெண்கூட வீட்டில் தங்கியிருந்த சந்தீப் என்ற இளைஞரை தேடிவந்தனர்.
அந்த நபர் தனது சொந்த ஊரான பெங்கோடகி தண்டா சென்றுவிட்டார் என தகவல் கிடைத்தது. அவரை சுற்றி வளைத்து விசாரித்தபோது, சமூக ஊடகத்தின் மூலமாக, இருவரும் பழக தொடங்கி, பின்னர் காதலிக்க ஆரம்பித்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார். இதன்படி, சில நாட்கள் முன்பாக, வீட்டில் பொய் சொல்லிவிட்டு, இருவரும் மங்களூருவிற்கு ஓடிவந்து, அபார்ட்மெண்ட் ஒன்றில் வீடு பார்த்து வாடகைக்கு தங்கியுள்ளனர். வீட்டின் உரிமையாளரிடம் இருவரும் திருமணமானவர்கள் என்றும், வேலை தேடி மங்களூரு வந்தோம் என்றும் பொய் சொல்லியுள்ளனர்.
சில நாள் ஒன்றாக தங்கியிருந்துவிட்டு, பின்னர் திருமணம் செய்துகொள்ள இருவரும் தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியுள்ளது. சந்தீப் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அஞ்சனா, அவரை திருமணம் செய்யும் முடிவை கைவிடுவதாகக் கூறியிருக்கிறார்.
சந்தீப்பை கைவிட்டுவிட்டு, வீட்டிற்கு திரும்பி, பெற்றோர் சொல்லும் நபரை திருமணம் செய்துகொள்ள அஞ்சனா தீர்மானித்திருக்கிறார். இதன்போது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியாக கேபிள் கம்பியால் அஞ்சனாவை கழுத்து நெரித்து, சந்தீப் கொலை செய்திருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். ஆனால், வீட்டின் உரிமையாளர் அஞ்சனாவின் சடலத்தை பார்த்ததும் போலீசில் புகார் அளித்ததோடு, சந்தீப்பை முறைப்படி அடையாளம் காட்டியிருக்கிறார். எனவே, இந்த வழக்கு எளிதாக முடிவுக்கு வந்ததாக, போலீசார் குறிப்பிடுகின்றனர்.