தலைவலி என்று சென்ற பெண்ணின் மண்டை ஓட்டில் பாதி அகற்றம்..! டாக்டர்கள் கூறிய தகவலால் அதிர்ந்த இளம் பெண்!

லண்டன்: மூளை வீங்கியதால் இளம்பெண்ணின் மண்டையோட்டில் பாதியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.


பிரிட்டனின் ஹாம்ப்ஷைர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீப் பிளேக். 22 வயதான இவர், கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி டோட்டிங் ஏ35 சாலையை கடக்க முயன்றார். அப்போது சிக்னலை மதிக்காமல் வேகமாக வந்த கார் ஒன்று இளம்பெண் ஸ்டீப் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஸ்டீப் சுயநினைவை இழந்தார். பாதசாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதன்போது, ஸ்டீப்பை பரிசோதித்த மருத்துவர்கள் அடிபட்ட அதிர்ச்சியில் அவரது மூளை மிக வேகமாக வீக்கமடைந்து வருவதால், அதனை சமாளிக்கும் வகையில், மண்டையோட்டின் மேல்பகுதியை அகற்ற தீர்மானித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் அவரது மண்டையோட்டின் மேல்பகுதிய அகற்றிய மருத்துவர்கள் அதற்குப் பதிலாக, டைட்டானியம் தகடு ஒன்றை ஸ்க்ரூ போட்டு பொருத்தியுள்ளனர்.  

தற்போது சுயநினைவை திரும்ப பெற்றுள்ள இளம்பெண் ஸ்டீப், ''எனக்கு நேர்ந்த கொடூரம் வேறு யாருக்கும் நிகழக்கூடாது. சாலை விதிகளை மதிக்காமல் செயல்படும் நபர்களால் பொதுமக்கள் எத்தகைய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதற்கு நானே உதாரணம். என்னை இடித்த கார் ஒழுங்காக சாலை விதிகளை பின்பற்றியிருந்தால், எனக்கு இந்த நிலை வந்திருக்காது. எனது கனவு வேலையான விமான பணிப்பெண்  வேலை இந்நேரம் எனக்குக் கிடைத்திருக்கும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.