இன்ஸ்டாவில் நாங்க உங்க ரசிகர்கள்! நெகிழ்ந்த 22 வயது வாலிபரை தூக்கிச் சென்று கற்பழித்த 4 பேர்!

22 வயது இளைஞரை 4 ஆண்கள் ஓரினச்சேர்க்கை உறவிற்கு வற்புறுத்தி பலாத்காரம் செய்த சம்பவமானது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரில் இளைஞர் ஒருவர் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். 

இதனை பார்த்த பலர் அந்த புகைப்படத்திற்கு பல லைக்குகளை கொடுத்துள்ளனர். அதன்படி அவருடைய ஃபாலோயர்களாக உள்ள 4 பேர் அந்த ஹோட்டலின் முகவரியை கண்டுபிடித்துள்ளனர். 4 பேரும் புகைப்படம் வெளியிட்டவருடைய ரசிகர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். அதன் பின்னர் அவரிடம் நன்றாக பேச்சு கொடுத்துள்ளனர். 

பைக்கில் செல்லலாம் என்று 4 பேரும் அன்பாக அழைத்ததால் வேறு வழியின்றி அந்த இளைஞர் சென்றுள்ளார். மும்பை விமான நிலையத்திற்கு அருகே சென்ற போது காரில் செல்லலாம் என்று அவரிடம் கூறியுள்ளனர். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். காரில் ஏறிய உடன் அந்த 4 பேரும், 3 மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட அந்த இளைஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். 

அதன் பின்னர் மயக்க நிலையில் அந்த கீழே இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். மயக்கம் கலைந்த பிறகு அந்த இளைஞர் இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 377-வது பிரிவின் கீழ் 4 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். அதில் ஒரு இளைஞருக்கு 18 வயது நிரம்பாத காரணத்தினால், அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதித்துள்ளனர். 

பிறரை சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர் மருத்துவமனையில் இருந்து வரவேண்டிய அறிக்கைக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.