கல்லூரிக்குள் திடீரென மாயமான இளம் மாணவி! 8 நாட்களுக்கு பிறகு அங்குள்ள குளத்தில் சடலமாக மிதந்த பகீர் சம்பவம்!

அமெரிக்காவில் காணாமல் போன கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் உடல் கல்லூரி வளாகத்தில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தை சேர்ந்த ஆன்ரோஸ் ஜெர்ரி 21, என்பவர் தனது கல்லூரி படிப்பிற்காக அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் உள்ள நோட்டரி டேம் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்ரோஸ் கல்லூரி விடுதியில் இருந்து காணாமல்போயுள்ளார்.

இதையடுத்து அவர் விடுதிக்கு நீண்ட நாட்களாக வராததை அறிந்த அவரது உடன் இருந்த நண்பர்கள் உடனே விடுதி நிர்வாகியிடம் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து ஆன்ரோஸ்சை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் அவர் இறந்து போயிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதையடுத்து தற்போது அவரது உடல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா அல்லது ஆன்ரோஸ் தற்கொலை செய்து கொண்டாரா என்ற நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது இறப்பிற்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.