மேற்கு வங்கத்தில் பறக்கப் போகும் காவிக் கொடி! விறு விறு கருத்துக்கணிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது 12 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.


மேற்கு வங்க மாநிலம் பாஜகவிற்கு எப்போதுமே எட்டாத ஒரு கனி தான். கடந்த தேர்தலில் மோடி அலை வீசிய நிலையிலும் அந்த மாநிலத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் அதன் பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் தனி கவனம் செலுத்தி அங்கு பாஜகவை காலூன்ற அமித்ஷா பிரம்ம பிரயத்தனம் செய்தார்.

இதன் விளைவாக இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பும் பாஜகவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜக இந்த முறை மேற்கு வங்கத்தில் 12 தொகுதிகள் வரை வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மோடி மற்றும் அமித் ஷாவின் தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மற்றும் மம்தா பானர்ஜி மீதான அதிருப்தி போன்ற காரணங்களால் பாஜகவிற்கு மேற்கு வங்கத்தில் 12 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ndtv டைம்ஸ் நவ் இந்தியா டுடே என முன்னணி ஊடகங்களும் மேற்கு வங்கத்தில் பாஜக 10 இடங்களுக்கு மேல் வென்று காவி கொடியை பறக்கவிடும் என்று கணித்துள்ளன.