அரவக்குறிச்சியில் ரூ.2000 நோட்டு ஜெராக்ஸ் டோக்கன்! டிடிவியை காலி செய்த செந்தில் பாலாஜி!

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெறுவதற்கு 20 ரூபாய் டோக்கன்தான் முக்கிய காரணம் என்று சொல்வார்கள். அந்த டோக்கன் விவகாரத்தை தினகரனுக்கு அறிமுகப்படுத்தியது செந்தில் பாலாஜிதானாம். அதனால், இன்று நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதிக்காகவும் அவர் 2,000 ரூபாய் டோக்கன் வழங்கியிருக்கிறார்.


அதன்படி  கரூர் பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதியில், ஆர்.கே.நகர் 20 ரூபாய் டோக்கன்களைப் போலவே தி.மு.க.,வினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்தனர்.  இதுதான் செந்தில் பாலாஜியின் டோக்கனாம். காலையில் ஓட்டுப் போட்டுவிட்டு, மாலையில் போய் அந்த 2000 ரூபாயை வாங்கிக்கொள்ளலாமாம்.

இந்த விவகாரம் அறிந்து டென்ஷனான அ.தி.மு.கவினர் உடனேயே, தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் கூறினர்.  இதனை அடுத்து அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். ஆனால், தி.மு.க.,வினர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வை விட அதிகம் டென்ஷன் ஆன்வர் தினகரன். தன்னுடைய அடையாளத்தை அழிக்கும் வகையில் செயல்பட்ட செந்தில்பாலாஜியை விடவே மாட்டேன் என்று கொந்தளித்திருக்கிறார். அதனால் தேர்தல் நாளிலும் அ.ம.மு.க.வினர் பணத்தை இறைத்து வருகிறார்களாம்.

அரவக்குறிச்சிக்கு நல்ல யோகம்தான்.