டெல்லி: கருத்து வேறுபாடு காரணமாக, கணவனே மனைவியை சுட்டுக் கொன்று சடலத்தை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 வயது இளம் மனைவியை வேலைக்காரர்கள் 2 பேருடன் சேர்ந்து கணவன் செய்த பகீர் சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

டெல்லியை சேர்ந்தவர் ஷஹில் சோப்ரா. 21 வயதாகும் இவர் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் துறையில் பணிபுரிந்து வருகிறார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்த நிலையில், தன்னுடன் பணிபுரிந்த நான்சி என்ற 20 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த மார்ச் மாதம் திருமணமான நிலையில், ஷஹில் குடும்பத்தினர் நான்சியை வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி நான்சியின் தந்தை தனது மகளிடம் பேச அலைபேசியில் முயற்சித்துள்ளார். ஆனால், மகளின் அலைபேசி எண் ஸ்விட்ச் ஆஃப் என தகவல் வரவே, சந்தேகமடைந்து போலீசில் புகார் செய்தார். இதுபற்றி விசாரித்த போலீசார், நான்சியை அவரது கணவர் ஷஹில் சுட்டு கொன்று ஹரியானாவின் பானிபட் பகுதியில் புதைத்துவிட்டதாக, கண்டறிந்தனர்.
இதன்பேரில் ஷஹில், அவரது உதவியாளர் சுபம் மற்றும் சுபம் மைத்துனர் பாதல் ஆகியோரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.