கல்யாணம் செய்யாமலேயே காதலனுடன் உல்லாச வாழ்க்கை! 20வயது காதலிக்கு நேர்ந்த பயங்கரம்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இளம் பெண்ணை மண்வெட்டியால் தலையில் தாக்கிக் கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


குஷி பரிஹார் என்ற 20 வயதுப் பெண்ணும், 28 வயது நபரும் கெல்வாத் - பந்தூர்னா தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு வீட்டில் ஒன்றாக தங்கிக்  கொண்டு வேலைக்கும் கல்லூரிக்கும் சென்று வந்தனர். அந்தப் பெண் கல்லூரியில் படித்ததோடு மாடலிங்கும் செய்து வந்தார். 

இந்நிலையில் நெடுஞ்சாலையோரத்தில் தலையில் வெட்டுக் காயங்களுடன் அந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் உடன் தங்கியிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாரின் சந்தேகம் அந்த நபர் மீது வலுத்தது. இதையடுத்து அந்த நபருக்கு உரிய மரியாதைகளை செய்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்தப் பெண்ணை கொன்றதை அந்த நபர் ஒப்புக்கொண்டான்.

இதையடுத்து அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.