20 வயதில் இருக்கும் பெண்கள் திருமண விஷயத்தை பொறுத்தவரை எப்படி தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பல விஷயங்களை கூறியுள்ளனர்.
20 வயதில் தமிழ் பெண்களுக்கு ஏற்படும் அந்தரங்க ஆசைகள்..! அவர்களே வெளியிட்ட தகவல்கள்..!

ஒரு ஆண் கடமை, கனவு அடையும் வரை திருமணத்தை தள்ளி வைக்க முடியும். ஆனால், ஒரு பெண்ணால் முடியுமா? என்பதே பெரும்பாலான பெண்களின் கேள்வியாக உள்ளது. இது குறித்து ஒரு பெண் கூறுகையில், நான் படித்து பட்டம் பெற்றவள். எனக்கு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. வாழ்வில் நல்லது, கெட்டது என இரண்டையும் சரி பங்கு அனுபவித்தவள் நான்.
எனது பயணங்கள் எனக்கு நிறைய பாடங்கள் கற்றுக் கொடுத்துள்ளன. வாழ்க்கை பயணத்தில் நான் என்னையும், என் வாழ்க்கையையும் நன்கு கட்டமைத்துக் கொண்டிருக்கிறேன். என்று கூறுகிறார். மேலும் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக உடனே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் எனக்கு தோன்றும்போதுதான் செய்து கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெண் இதுகுறித்து கூறுகையில், ஒரே ஒரு ஆணுடன் வாழ்ந்து, காதலித்து அவனையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற பெண் இல்லை. நான் ஒருசில ஆண்களுடன் என்னை பகிர்ந்திருக்கிறேன். அவர்களிடம் இருந்து நல்ல, கெட்ட விஷயங்களை அறிந்திருக்கிறேன். அவை எல்லாம் என்னை ஒரு வலிமையான நபராகவே உருவாக்கி உள்ளது. ஆனால், என் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உடைந்து போகவில்லை. என்னை பொறுத்தவரை டேட்டிங் என்பது திருமணத்திற்கான இன்டர்வியூ அவ்வளவு தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவதாக ஒரு பெண் தனியாக ஒரு அறையில் உட்கார்ந்து நாள் முழுக்க அழுததும், சிக்கலான மனநிலையில் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் குழம்பி போனதும் என்னை ஒருவர் காதலித்து விட்டு ஏமாற்றியபோது உணர்ந்தேன். இதனால் ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சென்றேன். உடல்ரீதியான கோளாறுகளை விட கொடியது மன ரீதியான கோளாறுகள். சிகிச்சை காலத்தில் நான் பட்ட அவதிகளை என்னால் கூற இயலாது.
நான்காவதாக ஒரு பெண், எப்போதாவது நண்பர்களுடன் எங்கேனும் வெளியே பயணம் மேற்கொள்ளும் போது நான் குடிப்பது வழக்கம். ஆண்கள் மட்டுமே மது அருந்தலாம், பெண்கள் குடிக்கக்கூடாது என ஏன் என எனக்கு விளங்கவில்லை. உடல்நலக்கேடு என்றால் 2 பேருக்கும்தானே ஆனாலும் குடிக்கும்போது என்றும் நான் எல்லை மீறியது இல்லை. மேலும் 8 மணிக்குள் வீட்டிற்கு நான் வந்துவிடவேண்டும் என கணவர் எதிர்பார்க்கக்கூடாது எனக்கான சுதந்திரம் மற்றும் இடத்தை எப்போதும் கணவர் விட்டுக்கொடுக்கக்கூடாது.
ஐந்தாவதாக ஒரு பெண் குறிப்பிட்ட வயதில் பெண்கள் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னது யார்? நான் திருமணமே செய்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். மனரீதியாக மற்றவர் கடமைகளை ஏற்பதற்கு இன்னும் தயாராகவில்லை. நான் இப்போதைக்கு எனது இலட்சியங்களை அடைய கடுமையாக உழைத்துக் கொண்டஈருக்கிறேன். எனக்கு இல்லறத்தை காட்டிலும் எனது வேலை சார்ந்த வாழ்க்கை மிகவும் முக்கியமாக படுகிறது.