என் மகன் தான் போய்ட்டான்..! ஆனா அவன் 10 பேருக்கு உயிர் கொடுத்து இருக்கான்..! கதறிய தந்தை..! சேலம் நெகிழ்ச்சி!

சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்திருப்பதும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழ்நார்யப்பனூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகிலுள்ள பெருமாகவுண்டம்பாளையம் எனும் இடத்தை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருடைய வயது 20. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடியில் அமைந்துள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் ஆத்தூர் அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

எதிர்பாராவிதமாக சாலை விபத்தில் சிக்கினார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை சேலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று அவர் மூளைசாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மலையாள அவருடைய பெற்று அவரின் உறுப்புகளை தானம் செய்ய தொடங்கினார். அதன்படி அவருடைய நுரையீரலும் ஒரு கிட்னியும் மணிப்பால் மருத்துவமனைக கொடுத்துள்ளனர். மற்றோரு கிட்னியை பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதயத்தை சென்னையில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். 6 மணிநேரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்பதால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர். 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் 15 நிமிடங்களில் விமான நிலையம் வரை காரில் எடுத்து சென்றுள்ளனர்.

விமானம் மூலமாக சென்னைக்கு இதயம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து சுரேந்திரனின் பெற்றோர் கூறுகையில், "எங்களுடைய மகன் இறக்கவில்லை. அவன் வேறொரு ரூபத்தில் வேறு சிலரின் உடல்களில் வாழ்ந்து வருகின்றான்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது கேட்போருக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும், சுரேந்திரன் என்ற பெற்றோரின் நோக்கமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.