ஒரே ஒரு நிமிடம் அசந்த நகைக்கடை பெண்! 2 இளைஞர்கள் அரங்கேற்றிய விபரீதம்! வைரல் புகைப்படம்!

நகை கடை ஊழியரை நைசாக திசைதிருப்பி மேஜையில் இருந்த நகைகளை இரண்டு இளைஞர்கள் கொள்ளையடித்து உள்ள சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சின்னையா தெருவில் ஆர்.கே.பி என்ற பிரபல நகைக்கடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  இந்த நகைக்கடை நிறுவனமானது அங்குள்ள பொதுமக்களிடையே நல்ல பரிச்சயம் பெற்றுள்ளது. 10-ஆம் தேதியன்று வாடிக்கையாளர் இருவர் தங்க செயின் மற்றும் டாலர்களை வாங்குவதற்கு கடைக்கு வந்துள்ளனர்.

கடை ஊழியர் அவர்களுக்கு எடுத்து காட்டி கொண்டிருந்தபோது, 2 பேரும் அவரின் கவனத்தை திசைதிருப்பும் வகையான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர் சற்று திசை திரும்பியவுடன், மேஜை மீதிருந்த 5 சவரன் மதிப்புள்ள 4 தங்க டாலர்களை அபேஸ் செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் சில டாலர்களை தேர்வு செய்துவிட்டு மீண்டும் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி கடையிலிருந்து அகன்றனர். சிறிது நேரம் கழித்து நகைகளை கணக்கு செய்தபோது 4 தங்க டாலர்கள் காணாமல் போயிருப்பதை கண்டு கடையிலிருந்தோர் அஞ்சினர். பின்னர் தங்களிடம் இருந்த சிசிடிவி கேமராக்களை கண்காணித்தபோது, அன்று காலை டாலர் வாங்குவதாக கூறி கொண்டு வந்த 2 இளைஞர்கள் நகையை திருடிச் சென்றதை கண்டுள்ளனர்.

நகை திருடு போனதை பற்றி நகைக்கடை உரிமையாளர் அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சிசிடிவி கேமரா அவர்களை கண்காணித்து கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.