இருசக்கர வாகனத்திலிருந்து 2 இரண்டு இளைஞர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவு! கும்மிருட்டு! டூ வீலரோடு உள்ளே விழுந்த இளைஞர்! திருமண பத்திரிகை கொடுக்கச் சென்றவருக்கு பயங்கரம்!
விழுப்புரம் மாவட்டத்தில் தேவதானம்பேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு வசித்து வரும் 2 இளைஞர்கள் திருமண பத்திரிக்கை தருவதாக அருகிலுள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக வாகன கட்டுப்பாட்டை இழந்தனர். இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் கீழே விழுந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திலும், தீயணைப்பு துறையினரிடமும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். நெடுநேரமாக போராடி ஒருவரது சடலத்தை மீட்டெடுத்தனர். ஆனால் இருசக்கர வாகனத்திலிருந்த பெட்ரோல் தண்ணீரில் கலந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு படையினர் மற்றொருவரை மீட்டெடுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
லாரியில் இருந்த தண்ணீரை கிணற்றில் ஊற்றி, வாயு நிறைந்த தண்ணீரை வெளியில் எடுத்த பிறகு தீயணைப்புத் துறையினர் போராடி மற்றொருவரின் உடலையும் மீட்டெடுத்தனர். பின்னர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.