கொதிக்கும் வெந்நீரில் 2 வயது குழந்தையின் கால்கள்! துடிக்க துடிக்க பாட்டி செய்த கொடூரம்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

குழந்தையை தண்டிப்பாத கூறி கொதிநீரில் நிற்க வைத்த பாட்டி.


கல்நெஞ்சையும் கரைக்க வைப்பது குழந்தையின் சிரிப்பு. குழந்தை அழும் சத்தம் கேட்டால் சாதி, மதம், நண்பர், எதிரி, பணக்காரர், ஏழை என பாரபட்சம் இல்லாமல் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்தி சமாதானம் செய்ய எல்லோருமே ஓடோடி வருவர்.

அதே சமயம் கூலிக்காக குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபடுபவர்கள் குழந்தையின் சேஷ்டையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் மேலைநாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

மேலை நாட ஒன்றில் 2 வயது குழந்தைக்கு தண்டனை கொடுப்பதாக கூறி கொதிக்கும் நீரில் நிற்க வைத்ததால் அந்த குழந்தை கால்களை இழக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கெய்லி ராபின்சன் என்ற அந்த குழந்தையை பராமரிக்கும் வேலையை குழந்தையின் தாயான பிரிட்டானி ஸ்மித் கொடுத்திருந்தார். மூதாட்டி நன்றாக குழந்தையை பார்த்துக் கொள்வதாக கருதி தன்னுடைய வேலைகளில் மும்முரமாக இருந்து வந்துள்ளார் பிரிட்டானி ஸ்மித்.

ஆனால் தன்னுடைய குழந்தையின் கால்களில் அடிக்கடி கொப்புளம் வருவதை பார்த்து அதிர்ச்சிடையந்த தாய் அது குறித்து மூதாட்டியிடம் கேட்டபோது குழந்தை அதிகம் சேட்டை செய்ததால் கொதிக்கும் நீரில் நிற்க வைத்து தண்டனை கொடுத்ததாக மனசாட்சியே இல்லாமல் கூறியுள்ளார்.

இதனால் வேதனையடைந்த தாய் பிரிட்டானி ஸ்மித் குழந்தைய உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது அந்த குழந்தை பாதம் முதல் முழங்கால் வரை பலத்த காயத்துடனு, கொப்புளங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை என்றாலே அங்கு ஓடுவதும் இங்கு ஓடிவருதம் சேஷ்டை செய்வதும்தான்.

அதைப் பார்த்து ரசிக்காத மனிதர்களே இல்லை. ஆனால் மூதாட்டியின் கொடூர செயலால் 2 வயது குழந்தை மருத்துவமனையில் முடங்கி நகரக் கூட முடியாமல் படுத்துள்ளது.

மேலும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கையில் தற்போது வரை 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் குழந்தையின் கால்கள் பூரண குணமாக மேலும் சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கும் அதே நேரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதால் குழந்தை கால்களை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலிசாரிடம் தெரிவிக்கப்பட்டு மூதாட்டி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 18 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னதான் பொருளாதார சிக்கல் இருந்தாலும் குழந்தையை இன்னொருத்தர் பொறுப்பில் விட்டு செல்லும் பெற்றோர்கள் அவர்கள் குழந்தையை முறையாக பராமரிக்கிறார்களா குழந்தை நிம்மதியுடன் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.