திருமணமாகி 2 வருடம்! கர்ப்பமான இளம் பெண்! திடீரென கலைந்த கரு! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் ஜீவிதா இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது.  

சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்த ஜீவிதா மருத்துவமனையில் பரிசோதித்ததில் கரு மிகவும் பலவீனமாக இருப்பதால், கலைத்தாக வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

இதனை அடுத்து ஜீவாவிற்கு கருக்கலைப்பு நிகழ்ந்துள்ளது. கருப்பு முடித்துவிட்டு இரண்டு மாத காலம் தாயார் வீட்டில் இருந்த ஜீவிதா நான்கு நாட்களுக்கு முன்பு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.  

இந்நிலையில், நேற்று ஜீவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜீவிதாவின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜீவிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜீவிதாவின் கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.