பசிக் கொடுமை! மண்ணை சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!.

பசிக் கொடுமையால் மண்ணை தின்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குதிபண்டலா கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளர் மகேஷ். இவரது மனைவி நீலவேணி. இவரும் கூலித் தொழிலாளியாக உள்ளார்.

அண்மைக்காலமாக கூலி வேலை எதுவும் இல்லாத நிலையில் கடும் வறுமையில் இவர்கள் வாடியுள்ளனர். இதனால் இவர்களின் குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுக்க முடியவில்லை. இதனால் அவரது 2வயது குழந்தை பசியால் மண்ணை எடுத்து சாப்பிட்டுள்ளது.

அதிகம் மண்ணை சாப்பிட்டதால் குழந்தையின் உணவுக் குழாய் அது சிக்கி மூச்சடைத்து பரிதாபமாக இறந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் கடந்த ஆண்டும் மகேஷ் – நீலவேணி தம்பதியின் குழந்தை மண்ணை சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களை மீட்ட அதிகாரிகள் வேலை கொடுத்து பசியை போக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலிலேயே இதை செய்திருந்தால் குழந்தை இறந்திருக்காது.