வீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..! விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு ஏற்பட்ட பயங்கரம்! தாயின் அலட்சியத்தால் கதறும் குடும்பம்!

சென்னையில் குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீர் வாளியில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவொற்றியூர் சண்முகபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி ஜனனி இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு சிவானிஸ்ரீ என்ற 2 வயது மகள் உள்ளார். மணிகண்டன் அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்க்ஷாப் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ தினத்தன்று ஜனனி தனது மகளை குளிக்க வைப்பதற்காக வாளியில் வெந்நீர் வைத்து அதை வீட்டு வாசலில் வைத்து விட்டு வீட்டினுள்ளே இருந்த வேலையை பார்த்து வந்துள்ளார்.இதையடுத்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வெந்நீர் வைத்திருந்த வாளி அருகே விளையாடியுள்ளது.

இதையடுத்து திடீரென வாளியின் உள்ளே குழந்தை சிவானி தவறி விழுந்துள்ளார். இதையடுத்து வாளி கீழே விழுந்த நிலையில் வெண்ணீர் முழுவதும் குழந்தையின் உடலின் மீது பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை கதறி அழுதுள்ளது இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உடனே தாய் ஜனனி ஓடிவந்து பார்த்தபோது குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தையின் உடலில் வெந்நீர் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இதை பார்த்து அதிர்ந்து போனான் ஜனனி உடனே அருகில் இருந்தர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் .அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குழந்தை சிவானிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் பயன்படுத்தக்கூடாத மற்றும் தொடக்கூடாத பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் வைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர்கள் குழந்தைகளின் மீது கவனம் வைக்கும் வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.