வீட்டுக்குள் இருந்த மீன்தொட்டியால் பயங்கரம்! எட்டிப்பார்த்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்! கதறி அழும் பெற்றோர்!

பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சோக சம்பவம் கரூர் அடுத்த மாயனூர் நடைபெற்றுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் உள்ளிக் கோட்டை கிராமத்தில் சத்தியமூர்த்தி - சுகந்தி தம்பதி வசித்து வருகின்றனர். சுகந்தி தன்னுடைய 2 வயது மகன் ஹரிதேஷ் உடன் கரூர் மாவட்டம் மணவாசியில் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். மிகவும் சுட்டித்தனமான குழந்தை என்பதால் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் தாய் சுகந்தி 2 நாட்களுக்கு முன்னர் தூங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை ஹரிதேஷ் எதிரில் உள்ள இளங்கோவன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கு சுமார் 2 அடி உயரம் உள்ள தண்ணீர் தொட்டியில் மீன்கள் நீந்துவதை பார்த்த குழந்தை தண்ணீருக்குள் விட்டு வேடிக்கை பார்த்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி மீன் நிறைந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டான்.

அக்கம் பக்கத்தினர் பார்த்து யாரும் காப்பாற்றாததால் தண்ணீரிலேயே மூழ்கி மூச்சுத்திணறி குழந்தை ஹரிதேஷ் பரிதாபமாக உயிரிழந்ததான். இந்நிலையில் தூங்கி எழுந்த சுகந்தி குழந்தையை தேடியுள்ளார். எங்கும் கிடைக்காத நிலையில் எதிர் வீட்டில் இருந்தவர்கள் குழந்தை தண்ணீரில் மூழ்கி மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இருந்தாலும் குழந்தையை காப்பாற்றி விடலாம் என எண்ணி ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகளின் அகால மரணத்திற்கு சமூகத்தையே குற்றம் சொல்வதை விட்டு பெற்றோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.