சாலையோரமாக விளையாடிய சின்னஞ்சிறு மழலை! நொடியில் சிதைத்த பள்ளி வேன்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

மதுரை உசிலம்பட்டியில் தனியார் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு பகுதியில் இயங்கி வரும் சரவணா மெட்ரிகுலேஷன் பள்ளியின் வாகனம் அம்பட்டயான்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக வழக்கம்போல் காலை வேளையில் வந்துள்ளது. இந்நிலையில் பொதுவாக பள்ளி வாகனம் என்றாலே ஓட்டுநர் மற்றும் அவருடன் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

இந்நிலையில் அந்த நாள் பள்ளியில் உதவியாளர் வராத நிலையில் ஓட்டுநர் மட்டுமே வாகனத்தை இயக்கி வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள குழந்தைகளை ஏற்றிவிட்டு வாகனத்தை சிறிது பின்னே நகர்த்தியுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையின் மீது வாகனத்தின் பின் சக்கரம் ஏறிய நிலையில் குழந்தை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் இதையறிந்து அருகிலிருந்தவர்கள்  உடனே ஓடி வந்து குழந்தையை மீட்க முயற்சித்துள்ளனர் இருந்தபோதும் வாகனத்தின் சக்கரம் குழந்தை மேலேறியதில் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பள்ளி வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாகன ஓட்டுநரை கைது செய்தனர். மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர் ஒரு உதவியாளரை அனுப்பாமால் விட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.