வயசு 2! சாதனைகள் 50! சின்னஞ் சிறுவன் என்னவெல்லாம் செய்கிறான் தெரியுமா?

இரண்டு வயது சிறுவன் ஒருவன் 50 வகையான யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறார்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் வைஷ்ணவி ஆகியோரின் ஒரே மகன் அஸ்வ பிரணவ். தற்போது இவருக்கு இரண்டே முக்கால் வயதாகிறது. ஆனால் இரண்டு வயதிலேயே இச்சிறுவன் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். வீட்டில் விளையாடிய வண்ணம் இருக்கும் பிரணவ் பக்கத்து வீட்டை சேர்ந்த பிள்ளைகள் சத்தம் போட்டு படிப்பதை கவனிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அவர்கள் படிக்கும் போதெல்லாம் தனது நினைவில் அதை ஏற்றுக்கொள்ளும் பிரணவ், ஒரு முறை இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் பட்டியலை தனது தாய் தந்தையிடம் கூறியதைக் கேட்டு அவர்கள் வியப்புற்றனர். இதையடுத்து மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை வரிசை மாற்றி மாற்றி கேட்டனர். அதற்கு பிரணவ் அற்புதமாக பதிலளித்த கேட்டு அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

வெறும் 48 நொடிகளில் அனைத்து தலைநகரங்களில் பெயரையும் கூறி அசத்தினான். இது மட்டுமல்லாமல் திருக்குறள், நாடுகளின் தலைநகரங்கள், கண்டங்கள் அவற்றில் உள்ள நாடுகள் ஆகிய அனைத்தும் இச்சிறுவனுக்கு அத்துப்பிடி. நினைவாற்றலில் சிறந்து விளங்கும் இச்சிறுவன் வில் மெடல் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் 50 வகையான யோகாசனங்களையும் செய்து அசத்துகிறான் அஸ்வ பிரணவ். இதிலும் உலக சாதனை நிகழ்த்தியுள்ள அச்சிறுவன் எதிர்காலத்தில் மேலும் பல உலக சாதனைகளைப் படைப்பான் என்று பெற்றோர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.