மரணப்படுக்கையில் 2 வயது குழந்தை! சிகிச்சை பணத்தை எடுத்துச் சென்று தந்தை செய்த கேவலமான செயல்! அதிர வைக்கும் சம்பவம்!

பிரேசில் நாட்டில் சால்வடார் பகுதியில் குடியிருக்கும் மேட்டஸ் ஆல்வஸ் (37) என்பவர் சுமார் 130,000 பவுன்டுகள் அளவில் இருக்கும் பணத்தை திருடியுள்ளார்.


19 மாதமே ஆன தனது குழந்தை அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகிறது.தற்போது அந்த குழந்தையின் சிகிச்சைக்காக சுமார் 216,000 பவுன்டுகள் வங்கியில் சேமித்து வைத்துள்ளனர்.இந்த தொகையானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் மக்களிடம் இருந்து சேகரித்தது எனவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த தொகையானது 3 முறை மருந்து வாங்கவே போதுமானது.தற்போது அந்த சேமித்து வைத்துள்ள பணத்தில் இருந்தே பெருந்தொகையை திருடியுள்ளார்.மேலும் அந்த பணத்தை விலாமாதர்களுடன் சேர்ந்து போதை மருந்துக்கும் ,மதுவுக்கும் ஆல்வஸ் அந்த பணத்தை செலவிட்டதாக தெரியவந்தது.

போலீசாரிடம் குடும்பத்தினர் அளித்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார் ஜுலை 22-ம் தேதி தலைமறைவாக இருந்த ஆல்வஸ்-யை கைது செய்துள்ளனர்.போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பணத்தில் 11000 பவுன்டுகளை நண்பர்களுடன் சேர்ந்து விபச்சார விடுதி ஒன்றை துவங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பணத்தில் விலை உயர்ந்த பொருட்களும் போதை மருந்தும் வாங்கியள்ளார் என்று விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மரணப்படுக்கையில் இருக்கும் தனது 2 வயது மகனின் சிகிச்சைக்காக சேமித்து வைத்துள்ள பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.