2 வயது சிறுமிக்கு அகற்றப்பட்ட கருப்பை! நெஞ்சை உலுக்கும் காரணம்!

2 வயது சிறுமி சிறுநீரக புற்றுநோயால் அவதிப்பட்டு கருப்பையை இழந்த சம்பவமானது பிரிட்டனில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் சிவிண்டன் எனும் இடத்தை சேர்ந்தவர் எட்வர்ட்ஸ். இவருடைய வயது 28. இவருக்கு திருமணமாகி 2 வயதான பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் எஸ்மி. 

ஜூன் மாதத்திலிருந்து குழந்தை கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்தது. உடனடியாக எட்வெர்ட்ஸ் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் தான் குழந்தைக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சையின் மூலம் தான் புற்றுநோயை நீக்க இயலும் என்று மருத்துவர்கள் எட்வர்ட்ஸிடம் கூறியுள்ளனர். அவ்வாறு நீக்கினால் வருங்காலத்தில் குழந்தையின் பிள்ளை பெற்றுக்கொள்ளும் திறன் குறைந்துவிடும் என்றும் எச்சரித்தனர்.

தன் குழந்தையை நாள் இனி தாயான பிறகு பிள்ளை பெற்றுக்கொள்ள இயலாது என்று மருத்துவர்கள் கூறியவுடன் எட்வர்ட்ஸ் கண்கலங்கினார். பின்னர் மருத்துவர்கள் வருங்காலத்தில் தேவைப்பட்டால் இந்த கருப்பையை அறுவை சிகிச்சையின் மூலம் செலுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். அதுவரை இந்த கருப்பையானது மருத்துவ முறையின்படி பாதுகாக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

2 வாரங்களுக்கு முன்னர் குழந்தைக்கு அறுவை சிகிச்சையின் மூலம் புற்றுநோய் நீக்கப்பட்டது. மேலும் ஒரு கருப்பையையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மருத்துவத்தை செய்ததாக மருத்துவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.