ஒரே நாளில் காதலி - கள்ளக்காதலிக்கு தாலி கட்டிய திருப்பூர் இளைஞர்! போலீஸ் ஸ்டேசனில் சுவாரஸ்யம்!

தாராபுரம் புதுக் கோட்டைமேடு பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வரும் நபரை இரு பெண்கள் ஒரே நேரத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாராபுரம் புதுக்கோட்டைமேடு இப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்தப் பெண் தாராபுரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ  ஓட்டுனருடன் நின்றிருப்பதை பார்த்து பொதுமக்கள் போலீசுக்கு புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பெண் மற்றும் அவருடன் இருந்த ஆட்டோ டிரைவரை காவல் நிலையத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவருடன் இன்னொரு பெண் இருந்துள்ளார் அவரும் தன்னையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆட்டோ டிரைவர் முதலில் அவர் வசிக்கும் அதே பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க கணவரை இழந்த பெண்ணுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அவருடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து இந்த காதல் விவகாரம் 19 வயது பெண்ணிற்கு தெரியவரவே இருவருக்கும் சண்டை ஏற்பட்டது இந்நிலையில் இருவரையும் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து ஆட்டோ டிரைவர் பழனி கோவிலுக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் ஒரே நேரத்தில் தாலி கட்டியுள்ளார். பின்னர் வீடு திரும்பிய நிலையில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

பின்னர் இது குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல் நிலையத்திற்கு வந்த பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு பெண்கள் தன் கணவருடன் தான் செல்வோம் என சொல்லி நிலையில் இருவரையும் ஆட்டோ டிரைவருடன் சேர்த்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.