பட்டப்பகல்! அனைவரும் பார்க்க பைக்கை லவட்டிய பலே திருடன்! திருக்கோவிலூர் சம்பவம்!

பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனம் திருடிச்சென்ற சம்பவமானது திருக்கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு மனோகரன் என்பவர் வசித்துவருகிறார். பொது இடங்களுக்கு சென்று இருசக்கர வாகனத்தில் தேநீர் விற்பனை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திற்கருகே சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தேனீர் விற்க சென்றுள்ளார். ஆனால் திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து மனோகரன் திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு வருமாறு முதலில் கூறியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் வாயிலில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்துச் சென்றபோது அது சிவப்பு நிற சட்டை அணிந்த மர்ம நபர் அவருடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துச்செல்வது பதிவாகியிருந்தது. 

உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.