இருசக்கர வாகனம் சாலையோரமிருந்த கம்பத்தின் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20வயது இளைஞருடன் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற 30 வயது விண்ணரசி! பிறகு நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!
புதுச்சேரியில் வேல்ராம்பட்டு எனுமிடம் உள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட திருமகள் நகர் 2-வது குறுக்கு தெருவில் பத்மாவதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகனின் பெயர் சுரேந்தர். சுரேந்தரின் வயது 20. சுரேந்தர் சென்னையில் உள்ள பிரபல சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.
இப்பகுதிக்கு அருகே திலாசுப்பேட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள விநாயகர் வீதியை சேர்ந்தவர் கிஷோர் குமார். கிஷோர் குமார் மனைவியின் பெயர் விண்ணரசி. விண்ணரசியின் வயது 30.
நேற்று முன்தினம் இரவு சுரேந்தர் லால்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது விண்ணரசி சுரேந்தரிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். சுரேந்தரும் விண்ணரசியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.
சிவாஜி சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியது. அதிவேகமாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்ஃபார்மரின் இரும்பு கம்பியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாயினர்.
இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவமானது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.