வீட்டை எழுதி தருவதற்கு மறுத்த தந்தையை மகன்கள் 2 பயங்கரமாக தாக்கியுள்ள சம்பவமானது சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்ல இருந்தும் விரட்டிடானுங்க..! பிளாட்பாரத்துல படுத்த என்ன மூஞ்சிலயே உதைக்குறானுங்க! மகன்களின் செயலால் கதறும் தந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கீழ் அனுப்பம்பட்டு எனுமிடத்தில் கோவிந்தராஜு என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 75. இவருக்கு மொத்தம் 4 மகன்கள் உள்ளனர். முதல் மகனின் பெயர் சுகுமார், 3-வது மகனின் பெயர் ரங்கநாதன். இவருடைய கடைசி மகனின் பெயர் நித்யானந்தம். நித்தியானந்தம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் கோவிந்தராஜிடம் வசித்து வருகின்றனர்.
முதல் 3 மகன்களும் இவரை அனாதையாக விட்டுச்சென்ற நிலையில், நித்யானந்தம் பணத்தை அனுப்பி தன்னுடைய தந்தை மற்றும் மனைவியை கவனித்து கொண்டு வந்துள்ளார். நகர் அனுப்பிய பணத்தில் ஒரு சிறிய வீட்டை கோவிந்தராஜு கட்டியுள்ளார். மேலும் அந்த வீட்டை தன் மகனான நித்தியானந்தம் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
இதனையறிந்த சுகுமாரும், ரங்கநாதனும் கடுமையாக கோபம் அடைந்துள்ளனர். அவ்வப்போது கோவிந்தராஜிடம் வீட்டை தங்களுடைய பெயருக்கு எழுதி வைக்குமாறு மிரட்டி வந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற மிரட்டல்களுக்கு கோவிந்தராஜ் மசியவில்லை. இறுதியாக கோவிந்தராஜ் மற்றும் நித்யானந்தத்தின் மனைவி, குழந்தை ஆகியோரை வீட்டை விட்டு வெளியே துரத்தி, சுகுமாரும் ரங்கநாதனும் வீட்டை பறித்து கொண்டனர். அவர்களுக்கு பயந்து கோவிந்தராஜு அருகேயுள்ள ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் மது அருந்திவிட்டு சுகுமாரும், ரங்கநாதனும் ரயில்வே நிலையத்திற்கு வந்து கோவிந்தராஜிடம் கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த இருவரும் தந்தை என்றும் பாராமல், அவரை எட்டி உதைத்து கொடுமை படுத்தியுள்ளனர். இதனை அங்கிருந்த மற்றொரு பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதனிடையே இருவர் மீதும் புகார் அளித்தும் அப்போது காவல்துறையினர் புகாரை எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோவிந்தராஜு வேறுவழியின்றி குறைதீர் மையத்திற்கு சென்று தீ குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
இந்த சம்பவமானது சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.