2 பொண்டாட்டிகாரருக்கு 2 மகன்களால் ஏற்பட்ட விபரீத முடிவு! திண்டுக்கல் பயங்கரம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தையை வெட்டிக் கொலை செய்த 2 மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அடுத்த காக்கையன்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு 2 மனைவிகளும், ஒன்பது மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். முத்துச்சாமி அதே பகுதியில் உள்ள கருப்பணசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

முத்துசாமி, அய்யலூரில் உள்ள தனது 2வது மனைவியுடன் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துசாமியை வழிமறித்த இரண்டு பேர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

விசாரணையில் முத்துச்சாமியை வெட்டியது முதல் மனைவியின் மகன்கள் வீரமணி, பாண்டியராஜன் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே முத்துச்சாமியின் 2 மனைவிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முத்துச்சாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.