+2 தேர்வு ரிசல்ட் மாணவிகளே டாப்பு

தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்.

தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் 83 மையங்களில் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் அமைச்சருக்குப் பதிலாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்களும், மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களும் நாளை முதலே விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. 7,60,606 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.56 சதவீதமாக உள்ள நிலையில், 41,410 பேர் இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் உடனடியாக மறுத்தேர்வு எழுதி அதன் மூலம் நடப்பாண்டில் கல்லூரிகளில் சேர்க்கை பெற வசதி வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.