மாடு கடத்த வந்ததாக கூறி இளைஞர்களை காவல்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பசு மாட்டையாட கடத்துறீங்க? உ.பியில் யோகி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு! 3 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹார்டோய் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இவ்விடங்களில் ஏராளமான பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அருகிலுள்ள இடங்களில் வாழ்ந்து வரும் இளைஞர்கள் பசு கன்றுகளை கடத்த முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாயின.
உடனே பசு கண்காணிப்பு குழுவினரும் நிறைய காவலர்களும் ஹார்டோய்க்கு விரைந்து சென்றனர். இளைஞர்கள் சிலர் ஊடுருவ முயன்ற போது காவல்துறையினர் அவர்கள் சுட்டுத்தள்ளினர். அதில் 2 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
3 பேரும் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.