விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அழகிகளை மீட்டெடுத்து, அதற்கு காரணமான நபர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது துடியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து இறக்கப்படும் அழகிகள்..! கோவையில் அதிகரிக்கும் அபார்ட்மென்ட் விபச்சாரம்! 2 பெண்கள் சிக்கினர்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் துடியலூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சரவணம்பட்டி என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக துடியலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. பல நாட்கள் நோட்டமிட்ட பிறகு காவல்துறையினர் அந்த குடியிருப்பில் ரெய்டு நடத்த முடிவெடுத்தனர்.
அதன்படி சம்பவத்தன்று காவல்துறையினர் சாதாரண உடையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அப்போது 2 இளைஞர்கள், 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்தியதில் அவ்விரு இளைஞர்களும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த குப்தீஸ்வரன் மற்றும் விருதுநகரை சேர்ந்த மகேந்திரன் என்பதனை கண்டுபிடித்தனர். அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சிக்கந்தர் பாஷா என்பவர் இதற்கு பின்னணியில் உள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். தலைமறைவாகியுள்ள சிக்கந்தர் பாஷாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் விபச்சாரத்தில் 22 வயது பெங்களூரை சேர்ந்த இளம்பெண் மற்றும் 37 வயதான தமிழகத்து பெண் அதுவரை மீட்டெடுத்து காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவமானது துடியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.