நாங்கள் காதலிக்கிறோம்..! கல்யாணம் பண்ணிக்க பர்மிசன் கொடுங்க..! உயர்நீதிமன்றம் வந்த ஓரினச்சேர்க்கையாளர்கள்!

கொச்சி: ஒருபால் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் இருவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


கொச்சியை சேர்ந்தவர் நிகேஷ் உஷா புஸ்கரன் மற்றும் சோனு. ஆண்களான இவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆவர். இவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம், காதல் திருமணம் செய்துகொண்டனர். எனினும், இந்திய சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வது குற்றச் செயலாகக் கருதப்படுகிறது.  

எனவே, இந்த சட்டத்தை தளர்த்தி, ஆண்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொள்ள அனுமதி தர வலியுறுத்தி, புஸ்கரன், சோனு இருவரும் சேர்ந்து, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன்மீது விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. ஒருவேளை இவர்களுக்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைக்கும்பட்சத்தில் அது இந்திய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.