2 சிங்கங்களிடம் சிக்கிய இளைஞர்! ஹீரோ போல் வந்து காப்பாற்றிய இன்னொரு இளைஞர்!

24 வயது இளைஞர் ஒருவரை, திடீரென 2 சிங்கங்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜெர்மனியின் வடக்கே ஹோடன்ஹேகன் பகுதியில் செரங்கட்டி பார்க் என்ற வன உயிரின பாதுகாப்பகம் உள்ளது. இங்கு, இங்கு, 24 வயதான இளைஞர் ஒருவர், வன உயிரினங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில், மே 4ம் தேதி வழக்கம்போல, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட அவர், கூண்டிற்குள் உள்ள சிங்கங்களுக்கு, இறைச்சி உணவை வைத்துள்ளார்.

கூண்டை திறந்து அவர் வைத்தபோது, எதிர்பாராவிதமாக, 2 சிங்கங்கள் அவரை சுற்றி வளைத்து தாக்கி, இழுத்துச் செல்ல முயன்றுள்ளன. உடனடியாக, அவர் கூச்சல் போடவே, சக ஊழியர் ஒருவர் ஓடிவந்து, சிங்கங்களுடன் தீரத்துடன் போரிட்டு விரட்டிவிட்டு, அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளார். 

இதுபற்றி வன உயிரின அதிகாரிகள் கூறுகையில், பார்வையாளர் நேரம் தொடங்குவதற்கு முன்பாக, இறைச்சி இடச் சென்ற நபரை சிங்கங்கள் எதிர்பாராவிதமாக தாக்கிவிட்டன, அவருக்கு உயிர் ஆபத்து ஒன்றும் இல்லை. லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.