ஜவுவளிக்கடைக்குள் முகத்தை துணியால் மூடிக் கொண்டு 2 பெண்கள் அரங்கேற்றிய விபரீதம்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

சட்டை வாங்குவது போல் மறைத்து நின்று பத்து நிமிடங்களில் 4 பேரிடம் பொருட்களை திருடிய பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


லண்டன் பல்கேரியாவை சேர்ந்தவர்கள் சோபியா மற்றும் டிமிட்ரோவ் இவர்கள் இருவரும்  திருடுவதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் மீது ஏற்கனவே நிறைய புகார்கள் எழுந்த நிலையில், இருவரையும் லண்டன் காவல் துறையினர் மப்ட்டியில் பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில் ஒருநாள் மத்திய லண்டனில் இருக்கக்கூடிய துணி கடை ஒன்றுக்குள் நுழைந்த இருவரும் அங்கே இருக்கக்கூடிய பெண்களுக்கு அருகாமையில் சென்றனர்.

பின் கைப்பை உடைய பெண்கள் இடம் துணி வாங்குவது போல் ஒரு சட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த சட்டையை மற்ற பெண்களின் பைக்கு மேல் படுவது போல் மறைத்து அதில் உள்ள பொருட்களை திருடி வந்துள்ளனர்.

இதனை மப்ட்டியில் இருந்த காவல் துறையினர் கண்டுபிடித்து திடீரென்று இருவரையும் கைது செய்தனர். பின் ஆதாரமாக கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராயும்பொழுது பத்து நிமிடங்களில் 4 பெண்களிடம் கைவரிசையை காட்டி இருப்பது தெரியவந்தது.

பின் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் அவர்களுக்கு 18 வாரங்கள் சிறை தண்டனையும் 122 பவுண்டுகள் இழப்பீடும் வழங்க கோரி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை அவர்கள் இருவரும் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டனர்.