சிறுமி கற்பழித்து கொலை! குற்றவாளிகள் நடுரோட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை! கொண்டாடும் மக்கள்! எங்கு தெரியுமா?

சோமாலியாவில் 12 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு இன்றையதினம் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


ஆயிஷா இலியாஸ் வயது 12 என்ற சிறுமி சோமாலியா நாட்டை சேர்ந்தவர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம கும்பல் ஒன்று சிறுமியை கடத்தி சென்றனர். அந்த கும்பல் இந்த சிறுமியை கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஆயிஷா என்ற சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பலரும் புதிதாக அஷ்டேகை உருவாக்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் பலன் தற்போது கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சிறுமியின் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்பு குற்றவாளிகள் என்று ஒரு சிலரை அடையாளம் கண்டு பிடித்தனர். விசாரணையில் அப்திபாதா அப்திரஹ்மான் வர்சமே, அப்திசலம் அப்திரஹ்மான்  மற்றும் அப்திசாகூர் முகமது டிஜ் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சோமாலியாவின் வடக்கு கடற்கரையில் உள்ள பொசாசோ நகர சதுக்கத்தில்  என்ற பகுதியில் இவர்கள் மூவருக்கும் மரண தண்டனை வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது. ஆகையால் இந்த மூவரில் அப்திபாதா அப்திரஹ்மான் வர்சமே,   மற்றும் அப்திசாகூர் முகமது ஆகிய இருவருக்கு மட்டும் இன்றைய தினம் மரண தண்டனை வழங்கப்பட்டது. அதாவது சோமாலியாவின் ஓசூர் நகர சதுக்கத்தில் இவர்களிருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட மூவரில் ஒருவரான அப்திசலம் அப்திரஹ்மான்  என்பவருக்கு மட்டும் இன்னும் இந்த மரண தண்டனை வழங்கப்படவில்லை. ஏனெனில் இவர் மீது போடப்பட்டுள்ள வழக்கில் மறு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.