நாங்கள் காதலிக்கிறோம்! பெற்றோரை அதிர வைத்த 2 பெண்கள்! போலீஸ் செய்த திடுக் செயல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு பெண்ணே பெண்ணை திருமணம் செய்ய போலீசார் உதவிய சம்பவம் அரங்கேறி உள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆண்களிடம் அதிகம் பேசமால் மிக நெருக்கமான தோழிகளாக இருந்து வந்ததை பார்த்த பெற்றோர் முதலில் சந்தோஷம் அடைந்தனர். நாளடைவில் இருவரின் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் தெரியவர பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்குள் ஏதோ முரணனான உறவு இருப்பதை கண்டுபிடித்தனர். இரு பெண்களிடம் பெற்றோர் நடத்திய தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்தனர். அதாவது தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினர். இதற்கு பெற்றோர், உறவினர் என யாருமே சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் திருமண பிரச்சனையில் தலையிட விரும்பாத போலீசார் சட்டமே ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் இந்த விஷயத்தில் தாங்கள் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2 பெண்களும் கேட்க போலீசாரும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதை அடுத்து இரண்டு பெண்களும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து தற்போது ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். மனிதன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்திருக்கும் போது பின்னர் ஏற்படும் அபாயங்களை உணர்வதில்லை.