படுக்கையறை ஏசிக்குள் 3 மாதங்களாக குடியிருந்த நல்ல பாம்பு! நடுநடுங்க வைக்கும் சம்பவம்!

புதுச்சேரியில் புதிதாக வாங்கிய ஏசி சரிவர இயங்காதத்கால் சர்வீஸ் பார்க்கபட்ட ஏசி மெசினிப் சுமார் இரண்டு அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒளிந்திர்ந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.


புதுச்சேரி சமூக நலத்துறையில் பணிபுரிந்து வரும் தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் தான் புதிய ஸ்பிளிட் ஏசி பொறுத்தப்பட்டது. சில தினக்களுக்கு முன்னர் ஏழுமலை ஏசியை ஆன் செய்ய முயற்சித்த போதி விசித்திரமாக உஷ் உஷ் என சத்தம் மட்டுமே வந்ததி அடுத்து பயந்து போய் உடனே ஆப் செய்து விட்டார்.

பின்னர் ஏ.சி.மெக்கானிக்கை அழைத்து சரிசெய்யும்படி கூறியுள்ளார். அதற்காக ஏசி மெக்கானிக் ஏசியை கழட்டும்போதுதான் சுமார் 2 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஏசிக்குள் நெளிந்ததை கண்டு பதறினர்.பின்னர் வனத்துறை ஊழியர் விரைந்து பாம்பினை நீண்ட போராட்டத்திற்க்கு பின்னர் பாம்பினை அப்புறப்படுத்தி, எடுத்துச் சென்று பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுவிட்டார்.

ஏசியின் பின்புறத்தில் வீட்டுக்கு வெளியில் இருந்து கொடுக்கப்பட்ட பைப் லைனை  ஓட்டையைச் சரிசெய்யாததால் அருகில் இருந்த மரத்தில் இருந்த பாம்பு அவ்வழியே வந்துள்ளது தெரியவந்தது. மேலும் 3 பாம்பு சட்டைகளும் அந்த ஏசியில் இருந்துள்ளன. இதன் அடிப்படையில்  சுமார் 3 மாதங்கள் அந்த பாம்பு இரைதேட மட்டும் வெளியில் சென்று விட்டு  மற்ற நேரங்களில் ஏசிக்குள் கமுக்கமாக இருந்தது தெரிய வந்தது.