சேலத்தில் காதலித்த பெண், அவரது தங்கை மற்றும் அவரது பெரியம்மா மகள் என மூன்று பேரை கர்ப்பமாக்விட்டு இளைஞர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
2 அக்காள்! ஒரு தங்கை! 3 பேரையும் கர்ப்பமாக்கிய பலே இளைஞர்! சேலம் பரபரப்பு!
தன்னை கர்ப்பமாக்கி திருமணம் செய்து விட்டு, தற்போது தனது பெரியம்மாள் மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக இளைஞன் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சேலம் கொளத்தூரைச் சேர்ந்த கார்த்திக்கை காதலித்து வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் சகோதரி இளவரசியுடன் கார்த்திக்குக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து எல்லை மீறியதால் இளவரசி கர்ப்பமாகியுள்ளார்.
இந்த விவகாரம் தெரிந்து கார்த்தியை திருமணம் செய்ய அவரது காதலி மறுத்துவிட்டார். இதனை அடுத்து கர்ப்பமான தனது சகோதரியை தனது காதலனுக்கு அந்த இளம் பெண் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்தநிலையில் திருமணம் முடிந்த பிறகு கார்த்திக் மாயமாகியுள்ளார். விசாரித்த போது இளவரசியின் பெரியம்மாள் மகளை 2வதாக திருமணம் செய்து திருப்பூரில் கார்த்திக் இருப்பது தெரியவந்துள்ளது.அங்கு சென்று பார்த்த போது இளவரசியின் பெரியம்மாள் மகளும் கர்க்கமாக இருந்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் இளவரசியின் சகோதரியையும் காதலிக்கும் போதே கர்ப்பமாக்கி கருவை கார்த்திக் கலைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவாக உள்ள கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர் ஒருவர் காதலி மற்றும் காதலியின் 2 சகோதரிகளை கர்ப்பமாக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது