கோவையில் போலி மருத்துவர் என செய்தி போடுவதாக மிரட்டி பணம் பறித்த புகாரில் போலி பத்திரிகையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளி மாமூல்! டாக்டரை மிரட்டி ரூ.10 ஆயிரம் வசூல்! ரிப்போர்ட்டர் 2 பேர் கைது!
பத்திரிகையாளர் என்ற பெயரில் பிரபல தொலைக்காட்சிகளின் ஊழியர் போல் ஒரு ஐடி கார்டு மாட்டிக்கொண்டும் அல்லது உள்ளூரில் பத்திரிகை நடத்துவதுபோன்று மாயை தோற்றத்தை உருவாக்கிக்கொண்டும் எங்கெங்கு மிரட்டினால் பணம் கிடைக்குமோ அங்கெல்லாம் சென்று பணம் பறிப்பது போலி பத்திரிகையாளர்கள் புல் டைம் ஜாப்.
இவர்களின் வேலையே எஸ்எஸ்எல்சி படித்துவிட்டு வைத்தியம் பார்க்கும் போலி மருத்துவர்கள், அருள்வாக்கு சொல்வதாய் கூறி, பெண் பக்தர்களிடம் கைவரிசை காட்டும் போலி சாமியார்கள் அதிக பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் என சட்டவிரோத செயல்கள் செய்பவர்காள பார்த்து குறி வைத்து மிரட்டுவார்கள். ஒருசிலர் பயந்து கொண்டு எங்கே மாட்டிக் கொள்ள போகிறோமோ என்று பணம் தந்துவிடுவார்கள். அனைத்திற்கும் துணிந்து சட்ட விரோத செயல்கள் செய்பவர்கள் முடிந்ததை பார்த்துக்கொள் என அனுப்பி விடுவார்கள்.
இதுபோல் பல இடங்களில் மிரட்டி பணம் பறித்து வந்த போலி பத்திரிகையாளர்கள் விஜயகுமார், சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டடுள்ளனர். இவர்கள் கோவை புதூர் பகுதியில் கே.ஜே. மருத்துவமனை வைத்து சித்த மருத்துவம் பார்த்து வரும் கண்ணனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். போலி மருத்துவம் பார்ப்பதாகவும் இதுகுறித்து பிரபல பத்திரிகையில் செய்தி போட்டுவிடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர். இதுகுறித்து மருத்துவர் கண்ணன் அளித்த புகாரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.