தேர்வறையில் காப்பி அடித்து அனுமதித்தற்காக 2 மருத்துவ கல்லூரிகள் தடை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
41 பேர் சேர்ந்து காப்பி அடித்து MBBSல் தேர்ச்சி! 2 மெடிக்கல் காலேஜூக்கு விதிக்கப்பட்ட அதிரடி தடை!
சென்ற ஆகஸ்ட் மாதத்தில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றன. சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள மாதா மருத்துவக் கல்லூரியில், குறிப்பிட்ட சில மருத்துவ தேர்வறைகளில் 41 மாணவ மாணவிகள் காப்பி அடித்துள்ள செய்தியானது எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை பெற்ற எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தினர் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், தேர்வு அறைகளில்வைக்கப்பட்டிருந்த வீடியோ பதிவுகளை கண்காணித்த போது தேர்வறையில் மாணவர்கள் அங்கும் இங்கும் சுற்றுவதும், புத்தகங்களை வைத்து பிட்டு அடிப்பதும் போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. தற்போது மாதா மருத்துவ கல்லூரியில் 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதே குற்றச்சாட்டானது ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியிலும் அரங்கேறியுள்ளது. வீடியோ பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த கல்லூரியில் 2 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலும் மருத்துவ கல்லூரிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.