2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் பலியான சம்பவமானது ஆந்திரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேருக்கு நேராக மோதிய 2 சொகுசுப் பேருந்துகள்! அப்பளம் போல் நொறுங்கிய கோரம்! 50 பேரின் நிலை?
ஆந்திரா மாநிலத்தின் சொகுசு பேருந்தான அமராவதி பேருந்து இன்று அதிகாலை விஜயவாடாவிலிருந்து குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. இதே சமயத்தில் தெலங்கானா மாநிலத்திலுள்ள நல்கொண்டா பகுதிக்கு செல்வதற்கு திருப்பதி நோக்கி எஸ்.எல்.என்.எஸ் நிறுவனத்தின் பேருந்து சென்று கொண்டிருந்தது.
சித்தூர் மாவட்டத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேருந்துகளில் ஓட்டுநர்களும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுநர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இதற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.