1ம் வகுப்பு மாணவன் மீது கற்பழிப்பு வழக்கு! வலை வீசி தேடும் போலீஸ்!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக அதே வகுப்பைச் சேர்ந்த மாணவன் துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் பள்ளி மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வரும் சிர்சா என்ற மாணவியை அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர் ஒருவர் மதிய உணவு வேளையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான். இந்நிலையில் மாணவி மாலை வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் கடுமையான வயிற்றுவலி இருப்பதாக கூறி அழுதுள்ளார்.

இந்நிலையில் அவரது பெற்றோர்கள் சிறுமியை சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு அதை மருத்துவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது மதிய உணவு இடைவேளையில் மாணவர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி கூறியுள்ளார்.

உடனே சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுவனின் பெயர் தெரியாது எனவும் முகத்தை பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் அந்த சிறுமி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதேவேலையில் அந்த சிறுவன் மீது 6/18 பிரிவின் கீழ் குழந்தைகள் பாலியல் பலாத்கார குற்றப்பிரிவு ( போஸ்கோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் அங்கு பயிலும் குழந்தைகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மட்டும் பாலியல் ரீதியாக யாரேனும் ஈடு பட்டால் உடனே பள்ளி வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள் பள்ளி நிர்வாகத்திடம் காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.