முதலாளியின் மனைவியுடன் தகாத உறவு! 20 வயது இளைஞனுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

முதலாளியின் மனைவியுடன் தவறான உறவில் இருந்த இளைஞனை கட்டிவைத்து தாக்கிய முதலாளி உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


மும்பை கந்திவாலியைச் சேர்ந்த 19 வயது இளைஞனான கணேஷ் ஷெட்டி, அகமதாபாத்தைச் சேர்ந்த பத்வாத் என்பவரின் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் பத்வாதின் 19 வயது மனைவியை கடந்த ஜனவரி மாதம் கணேஷ் சந்தித்தார். 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பத்வாதின் மனைவி அழைப்பின் பேரில் அங்கு சென்ற கணேஷை, அந்தப் பெண் தவறான உறவுக்கு கட்டாயப்படுத்தி இணங்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. அதுமுதல் அந்தப்பெண் வீட்டில் தனியாக இருக்கும்போதெல்லாம் இருவருக்குமான தவறான உறவு தொடர்ந்தது. 

இதை ஒருமுறை பத்வாதின் உறவினர் பார்த்து விட இதனால் பதற்றம் அடைந்த கணேஷ் அகமதாபாத்தில் இருந்து பர்பானி என்ற இடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில் கணேஷை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனது குடும்பத்தினரை சமாதானப்படுத்தி விட்டதாகவும் அகமதாபாத்துக்கு திரும்பி வருமாறும் கூறினார். 

இதையடுத்து அகமதாபாத்துக்கு வந்த கணேஷை பத்வாதும் அவரது 6 ஊழியர்களும் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கியதோடு அதனை வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கணேஷை எச்சரித்து அவர்கள் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். நடந்தது எதையுமே கணேஷ் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் தாக்கப்பட்ட வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது.

இதையடுத்து கணேஷின் தந்தை அவரிடம் விசாரித்ததையடுத்து அவர் நடந்ததைக் கூறினார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பத்வாதையும், அவரது ஊழியர்களையும் தேடி வருகின்றனர்.