எங்க அம்மாவ அவர் வச்சிருக்குறதா என் காதுபடவே பேசுனாங்க..! அதான்..! வேலூரை மிரள வைத்த 19 வயது இளைஞன்!

வேலூரில் பீடித் தொழிலாளி கொலை வழக்கில் அவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டிருந்த பெண்ணின் மகன் கொலை செய்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.


சத்துவாச்சாரி, வஉசி நகர் மலையடிவாரப் பகுதியில் வசித்து வந்த பீடித்தொழிலாளி ரகு 2 தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் ரகுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன சங்கீதா என்ற பெண்ணுடன் முறையற்ற உறவு இருந்ததும், இதை விரும்பாத சங்கீதாவின் 19 வயது மகன்தான் ரகுவை கொலை செய்ததும் தெரியவந்தது. 

சங்கீதாவின் முறையற்ற நடவடிக்கையால் மனமுடைந்த அவரது கணவர் பாபு ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார். இதை அடுத்து மகனுடன் வசித்து வந்த சங்கீதா, ரகுவுடனான உறவை அதிகரித்துக் கொண்டார்.

தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்த மகனுக்கு தாயின் நடவடிக்கை எரிச்சலைய செய்தது. அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை பற்றி காதுபட பேசும்போது நொந்து போனார் அவரது மகன். இதனால் ரகுவை வீட்டிற்கு வரவேண்டாம் என கண்டித்துள்ளார்.

ஆனால் அதை அவர் கேட்கவில்லை. `என் அம்மாவுடன் இனிமேல் நீ பேசக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளார் சங்கீதாவின் மகன். இவை அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து சங்கீதாவின் மகன் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீசாரிடம் விஜய் கூறும்போது என்னுடைய குடும்பம் சீரழிந்ததற்கு ரகுதான் காரணம் என்றும் அதனால்தான் அவரை கொன்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.