லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் இளம்பெண் வயிற்றில் இருந்து உருண்டை வடிவில் தலைமயிர் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கடும் வலி! ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன இளம் பெண்! வயிற்றுக்குள் கத்தை கத்தையாக தலை முடி! அரண்டு போன டாக்டர்கள்!

லூதியானா அங்குள்ள மகாவீரா சிவில் ஹாஸ்பிடலில், 19 வயதான பெண் ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில், 22 செ.மீ நீளம் மற்றும் 8செமீ அகலத்திற்கு பெரிய உருண்டை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனை பரிசோதித்து பார்த்தபோது, தலைமயிர் என தெரியவந்தது. உடனடியாக, அதனை அறுவை சிகிச்சை செய்து, டாக்டர்கள் அகற்றிவிட்டனர். விநோதமான மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்த இளம்பெண், அவரது தலைமுடியையே கடித்து தின்னும் பழக்கம் கொண்டவர் என்பதால் இத்தகைய விபரீதம் நிகழ்ந்திருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
தலைமுடி என்பவது ஒரு வித்தியாசமான பொருள். அந்த பொருளை நம் உடலால் ஜீரணம் செய் முடியாது. எனவே உடலுக்குள் நாம் செலுத்தும் இந்த முடி இப்படியாக இரைப்பையில் சென்று சேர்ந்துவிடும். இதனால் மிக மோசமான விளைவுகள் கூட ஏற்படும்.