முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் புதுமையை உணர்ந்திருப்பது புதுக்கோட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பற்கள் மட்டும் அல்ல..! முன் தாடையும் நீட்டிக் கொண்டு இருந்தது! ஆனால்..? பிரியாவை நெகிழ வைத்த அரசு டாக்டர்கள்!
திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள புதுப்பட்டி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகப்பிரியா. சண்முகப்பிரியாவின் வயது 19. இவருக்கு பற்கள் முன் தள்ளப்பட்டு முக அழகை குறைத்து வந்தது. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சாப்பிடும்போது உணவை மென்று சுவை பதிலும் இவருக்கு சிரமங்கள் இருந்துள்ளன.
இதனுடைய நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த நபர் ஒருவரின் ஆலோசனைப்படி பற்களுக்கு கிளிப் போட்டுக்கொண்டார். ஆனால் கிளிப் போட்டும் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. தற்கிடையே முக சீரமைப்புக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் முதலில் அவருடைய முகத்தை ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர்.
அப்போது அவருடைய தாடைப் பகுதியை முன்வந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். மருத்துவர் குழு ஒன்றிணைந்து அந்த மாணவிக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தனர். 3 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு சீரமைப்பு குழுவின் டீன், மீனாட்சிசுந்தரம் கூறுகையில் "மாணவிக்கு பற்கள் மட்டும் முன்னே வந்திருந்தால் கிளிப் மூலம் சரி செய்திருக்கலாம். ஆனால் அவருக்கு தாடை பகுதியே முன்னே வந்திருந்தது. இதனால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை காட்டிலும் வேறு எந்த முறையையும் நம்மால் பின்பற்ற இயலாது. முக சீரமைப்பு அறுவை சிகிச்சை அந்த மாணவிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது தற்போது அந்த மாணவிக்கு எந்த சிரமமும் இல்லை. சிலர் தாடை எலும்புகள் வெட்கப்பட்டு தகடு மற்றும் ஸ்கூல் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. முக சீரமைப்பு சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ளது" என்றார்.
சிகிச்சை முடிந்தவுடன் மாணவி, "என்னை பார்க்கும் போது எனக்கே புதிதாய் தோன்றுகிறது. என் நண்பர்கள் அனைவரும் முழுவதுமாக மாறிவிட்டால் என்று கூறும்போது பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. மருத்துவர்களை நான் என்றும் மறக்கமாட்டேன்" என்றார். இந்த செய்தியானது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.