56 வயதில் தந்தைக்கு வந்த காதல்! உதவி செய்து சேர்த்து வைத்த 19 வயது மகள்! நெகிழ வைக்கும் சம்பவம்!

இன்னொரு பெண்ணை காதலிப்பதற்கு தன் தந்தைக்கு மகள் உதவி செய்த சம்பவமானது அமெரிக்கா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு ஜெஃப் என்ற 56 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு கார்லி செவில் என்ற 19 வயது மகள் உள்ளார்.

இவர் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதற்கு என்ன கலர் சட்டையை அணிய வேண்டும் என்று தன் மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு கார்லி நீங்கள் வெள்ளை சட்டைக்கு பதிலாக நீல கலர் சட்டை அணிந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் சட்டையை டக் இன் செய்து, பெல்ட் அணிந்து கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இவர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனைக் கண்ட நெட்டிசன்கள் தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான உறவானது இது மாதிரிதான் இருக்க வேண்டும் என்று பாராட்டியுள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.