பூட்டிய வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த 18 வயது பெண்! நேரில் பார்த்த சகோதரர்! பின்னர் நடந்தது?

ஹரியானா மாநிலம் பல்லப்கரில் 18 வயது இளம் பெண் தனந்த் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் கொலை செய்த மர்ம நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


அந்த இளம் பெண்ணின் தந்தையும், தாயும் வேலைக்குச் சென்றுவிடும் நிலையில், இளம்பெண்ணும் அவரது தம்பியும் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விளையாடச் சென்று விட்டுத் திரும்பிய சிறுவன், வீட்டில் தனது சகோதரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அலறியதாகக் கூறப்படுகிறது.

அதனைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் இளம் பெண் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த இளம் பெண்ணின் தந்தை பகவான் தாஸ் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். 

வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்த  நபர் யார் என்பது குறித்தும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதம் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் புலனாய்வு மேற்கொண்டுள்ளனர்.