காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன்! கன்னியாகுமரியில் விபரீதம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதுடைய ஒரு பெண்ணை தனியே அழைத்துச்சென்ற காதலன் அவரது நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் களியல் பகுதியை சேர்ந்த கவிதா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்துடன் அதே பகுதியில்  வசித்து வருகிறார் . இவர்  அவரது வீட்டின் அருகே உள்ள பலசரக்கு கடை ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுனில் குமார் என்ற நபர் அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால்  அவரிடம்  நன்றாக பேச ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து நாளடைவில்  அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுனில்குமார் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி அப்பெண் தனிமையில் இருக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில்  இருவரும்  ஊருக்கு வெளியே உள்ள  பகுதிக்கு சென்றுள்ளார். 

அப்போது சுனில் குமார் தனிமையில் வராமல் தனது நண்பரான குலசேகரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்துள்ளார். அங்கு வந்த இருவரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். உடனே அப்பெண்  இதுபற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் .

அதை கேட்டவுடன் அதிர்ந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் அப்பெண்ணின் காதலர் சுனில் குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . தலைமறைவான அவரது நண்பரான அ.தி.மு.க பிரமுகரான சுஜின் ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்